அங் மோ கியோவில் நிகழ்ந்த விபத்தில் 11 வயதுச் சிறுவன் சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த விபத்து தொடர்பில் 71 வயது வாகனமோட்டி காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) பிற்பகல் 3.30 மணியளவில் அங் மோ கியோ அவென்யூ 3ல் உள்ள புளோக் 409 அருகே விபத்து நிகழ்ந்திருப்பதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தது.
காரும் நடையரும் சம்பந்தப்பட்ட விபத்து அது என்றும் டான் டோக் செங் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்ப்பட்டதாகவும் அந்தப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.

