ஜூன் 13ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் சிங்கப்பூரில் மொத்தம் 119 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது 2026ஆம் ஆண்டில் இதுவரை பதிவான ஆக அதிகமான வாராந்தர எண்ணிக்கையாகும்.
இந்த எண்ணிக்கை, முந்தைய வாரத்தை விட 39 அதிகம். மே முதல் அக்டோபர் வரையிலான சிங்கப்பூரின் வழக்கமான டெங்கி உச்ச காலகட்டத்திற்கு இடையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசியச் சுற்றுப்புற அமைப்பின் இணையப்பக்கம் தெரிவிக்கிறது.
ஜூன் 15 நிலவரப்படி, செயல்பாட்டில் உள்ள 12 டெங்கிக் குழுமங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் சிவப்பு எச்சரிக்கை கொண்ட நான்கு குழுமங்களும் அடங்கும்.
பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ள, அதிக ஆபத்துள்ள குழுமங்களை இது குறிக்கிறது.
இந்த நான்கு சிவப்பு எச்சரிக்கைக் குழுமங்களில், கன்ட்ரிசைட் ரோடு/ லென்டோர் அவென்யூ வட்டாரத்தில் உள்ள 34 சம்பவங்களைக் கொண்ட குழுமம் ஒன்றும் அடங்கும். அங்கு டெங்கிப் பரவல் விகிதம் வேகமாக இருப்பதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு குறிப்பிட்டது.
ஜாலான் பாங்காவ்/ஜாலான் ஜராக் (Jalan Bangau/Jalan Jarak) வட்டாரத்தில் 22 சம்பவங்கள் கொண்ட குழுமம்,
நேராம் ரோடு/நிம் கிரசென்ட் (Neram Road/Nim Crescent) வட்டாரத்தில் 19 சம்பவங்கள் கொண்ட குழுமம், லைலாக் டிரைவ்/மிமோசா ரோடு (Lilac Drive/Mimosa Road) வட்டாரத்தில் 11 சம்பவங்கள் கொண்ட குழுமம் ஆகியவை இந்த மூன்று குழுமங்கள்.
இவை இயோ சூ காங் வட்டாரத்தில் ஒன்றுக்கொன்று அருகே அமைந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
தேசியச் சுற்றுப்புற அமைப்பின் இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, மே 23ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 53 சம்பவங்கள் பதிவானது.
சிங்கப்பூரில் பதிவாகும் வாராந்திர டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை 50க்கும் மேலாகவே நீடிப்பதை இது காட்டுகிறது.
ஜனவரி முதல் ஜூன் 13 வரை மொத்தம் 938 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் டெங்கியால் ஒருவர் உயிரிழந்ததாக, ஏப்ரல் 21 வெளியிடப்பட்ட அதன் காலாண்டு டெங்கிக் கண்காணிப்புத் தரவுகளில் தேசியச் சுற்றுப்புற அமைப்பின் முன்னதாகக் கூறியிருந்தது.
சிங்கப்பூரில் வழக்கமாக மே முதல் அக்டோபர் வரை டெங்கி உச்சத்தில் இருக்கும். வெப்பமான தட்பநிலை கொசுக்களின் உற்பத்தியைத் துரிதப்படுத்தக்கூடியதே அதற்குக் காரணமாகும்.

