கடந்த மூன்று டோட்டோ குலுக்கல்களில் வெற்றியாளர் எவரும் இல்லாத நிலையில், திங்கட்கிழமை (செப்டம்பர் 29) நடந்த $12.3 மில்லியன் குலுக்கலில் இரண்டு அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டுகளுக்குப் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
வெற்றி எண்கள்: 15, 16, 22, 34, 35, 43. உபரி எண் 26.
வெற்றிபெற்ற சீட்டுகளில் ஒன்று, சைனாடவுன் பீப்பள்ஸ் பார்க் சென்டரில் இருக்கும் சிங்கப்பூர் பூல்ஸ் கிளையில், ‘குவிக்பிக் சிஸ்டம் ரோல் என்ட்ரி’ முறையில் வாங்கப்பட்டது.
மற்றொரு சீட்டு, புளோக் 1ஏ யூனோஸ் கிரசென்ட்டில் உள்ள 7-இலெவன் கடையில், ‘சிஸ்டம் 12 என்ட்ரி’ முறையில் வாங்கப்பட்டது.
இதில், ஒவ்வொரு சீட்டும் $6,145,776 பரிசுத்தொகையைப் பெற்றுள்ளது.
இந்தச் சீட்டுகள், இரண்டு தனிநபர்களுக்குச் சொந்தமானதா பலரால் பகிரப்பட்டதா என்பது தெரியவில்லை.
இதற்கிடையே, ‘குரூப் 2’ பரிசை 12 சீட்டுகள் தட்டிச்சென்றன. அவற்றின் பங்குத்தொகை தலா $116,415.
‘குரூப் 1’ பரிசுத்தொகை செப்டம்பர் 18ஆம் தேதி ஏறத்தாழ $1.2 மில்லியனிலிருந்து செப்டம்பர் 22ஆம் தேதி ஏறக்குறைய $3 மில்லியனாக அதிகரித்ததை சிங்கப்பூர் பூல்ஸ் இணையப்பக்கம் காட்டியது.
தொடர்புடைய செய்திகள்
செப்டம்பர் 25ஆம் தேதி நடந்த அடுத்த குலுக்கலில் ஏறத்தாழ $5.6 மில்லியன் ‘குரூப் 1’ பரிசுத்தொகை வழங்கப்பட்டபோதும், பரிசை யாரும் வெல்லவில்லை.
$10 மில்லியனுக்கும் அதிக பரிசுத்தொகையைக் கொண்ட கடைசி டோட்டோ குலுக்கல் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்தது. அப்போது $12.5 மில்லியன் பரிசுத்தொகை மூன்று அதிர்ஷ்டச் சீட்டுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிலையில், $5 மில்லியன் ‘சிங்கப்பூர் சுவீப்’ குலுக்கல் புதன்கிழமை (அக்டோபர் 1) மாலை 6.30 மணிக்கு நடைபெறும்.