தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டோட்டோ: ஒரே சீட்டுக்கு $12.8 மில்லியன் பரிசு

1 mins read
db8afa70-6a29-439a-82ca-33de5e1ebf52
தோ பாயோ வீவக மையத்தில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கடையில் வியாழக்கிழமை (ஜூலை 31) டோட்டோ சீட்டு வாங்க நீண்டிருந்த வரிசை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒரே ஒரு சீட்டுக்கு $12.8 மில்லியன் டோட்டோ பரிசு கிடைத்துள்ளது. அந்தச் சீட்டில் இடம்பெற்ற அதிர்ஷ்ட எண்கள் 7, 19, 20, 21, 22, 29, உபரி 37.

இதற்கு முன்னர் நடைபெற்ற மூன்று குலுக்கல்களில் யாரும் வெற்றிபெறாத நிலையில் வியாழக்கிழமை (ஜூலை 31) நடத்தப்பட்ட குலுக்கலில் அந்தப் பரிசுத் தொகை விழுந்துள்ளது.

அந்த அதிர்ஷ்டச் சீட்டு குவிக்பிக் சாதாரண பங்கேற்பு (QuickPick Ordinary Entry) முறையில் வாங்கப்பட்டது. 

அந்தப் பரிசுச் சீட்டு ஒருவருக்குச் சொந்தமானதா அல்லது பலரும் பங்கு போட்டு வாங்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

குரூப் 2 பரிசு 20 சீட்டுகளுக்குக் கிடைத்துள்ளது. $73,408 பரிசுத்தொகை அந்தச் சீட்டுகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும்.

கடந்த மூன்று முறை குரூப் 1 பரிசு யாருக்கும் விழாததால் அதற்கான பரிசுத்தொகை கூட்டப்பட்டு, இறுதியாக $12.8 மில்லியன் ஆனதாகச் சிங்கப்பூர் பூல்ஸ் தெரிவித்துள்ளது.

ஜூலை 21ஆம் தேதிக்குரிய $1.2 மில்லியன், ஜூலை 24ஆம் தேதிக்குரிய $2.9 மில்லியன், ஜூலை 28ஆம் தேதி குலுக்கிற்கான தொகை $5.8 மில்லியன் ஆகியன ஜூலை 31ஆம் தேதிக்கான பரிசுத்தொகையுடன் சேர்க்கப்பட்டன.

டோட்டோ குலுக்கில் $10 மில்லியனுக்கு மேல் பரிசுத்தொகை கிடைத்திருப்பது இவ்வாண்டில் இது எட்டாவது முறை.

ஜூன் 19ஆம் தேதி நடத்தப்பட்ட குலுக்கிலும் ஒரே ஒரு சீட்டுக்கு $12.3 மில்லியன் பரிசுத்தொகை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு முந்திய மூன்று குலுக்குகளில் யாரும் வெற்றி பெறாததைத் தொடர்ந்து பரிசுத்தொகை ஒன்றிணைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்