மரினா பே சேண்ட்ஸ், சிங்கப்பூரில் உள்ள அதன் சூதாட்ட வளாகத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு S$12 பில்லியன் டாலரை அது கடன் பெற்றுள்ளது.
இந்த விவகாரத்தை, நன்கறிந்த ஒருவர் தெரிவித்தார்.
டிபிஎஸ் குழுமம் ஹோல்டிங்ஸ் மலாயன் பேங்கிங், ஓசிபிசி, யுனைடெட் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை ஒருங்கிணைந்து அந்த கடன் வசதிக்கு ஏற்பாடு செய்துள்ளதால் மேலும் 22 கடன் வழங்குவோர் கடன் வழங்க ஆர்வமாக உள்ளனர்.
ஆனால் இந்தச் சமயத்தில் கடன் குறித்த எந்த விவரத்தையும் வெளியிட முடியாது என்று மெரினா பே சேண்ட்சின் பிரதிநிதியாளர் குறிப்பிட்டார்.
மரினா பே சேண்ட்சின் தாய் நிறுவனமான லாஸ் வேகாஸ் சேண்ட்சும், உடனடியாக விவரம் எதையும் வெளியிடவில்லை.
நிறுவனத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட சூதாட்ட வளாகத்தை விரிவுபடுத்த கடன் பயன்படுத்தப்படும். 2019ஆம் ஆண்டில் அதற்கான செலவு 3.4 பில்லியன் அமெரிக்க வெள்ளி என மதிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது அந்தச் செலவு 8 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்குக் கூடியிருக்கிறது.
கொள்ளைநோய்க்குப் பிறகு சிங்கப்பூரின் சுற்றுலாத் துறை குறிப்பிடத்தக்க அளவு மீண்டு வந்துள்ள சமயத்தில் மெரினா பே சேண்ட்சின் விரிவாக்கத் திட்டம் அமல்படுத்தப்படவிருக்கிறது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 21 விழுக்காடு கூடி 16.5 மில்லியன் ஆகியுள்ளது. சீனா, இந்தோனீசியா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து அதிகமானோர் சிங்கப்பூர் வந்திருந்தனர்.