$12 மில்லியன் டோட்டோ: மூவருக்கு முதல் பரிசு

$12 மில்லியன் டோட்டோ: மூவருக்கு முதல் பரிசு

1 mins read
a29ac096-d95e-4faa-9c82-1ca2aa4f66fd
பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு, தீவுமுழுவதும் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கடைகளில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. - படம்: ஷின்மின்

வருடாந்தர டோட்டோ ஹொங் பாவ் குலுக்கலில், முதல் பரிசான 12 மில்லியன் வெள்ளியை மூவர் பகிர்ந்துகொள்கின்றனர்.

ஒவ்வொரு வெற்றியாளருக்கும் $4 மில்லியன் கிடைக்கிறது.

டோட்டோ குலுக்கலில் வெற்றிபெற்ற எண்கள்: 5, 9, 20, 23, 45, 46. உபரி எண்: 7.

வெற்றிச் சீட்டுகளில் ஒன்று, செங்காங்கின் ‘கம்பஸ் ஒன்’ கடைத்தொகுதியில் உள்ள ‘கோல்ட் ஸ்டோரேஜ்’ கடையில் ‘குவிக்பிக் சிஸ்டம் 8’ மூலம் வாங்கப்பட்டது.

மற்றொரு வெற்றிச் சீட்டு, புளோக் 47, சிம்ஸ் பிளேசில் உள்ள ‘வன்ரைஸ்’ அதிகாரபூர்வ சில்லறைக் கடையிலும், மூன்றாவது வெற்றிச்சீட்டு, பல இடங்களில் வாங்கப்பட்ட ‘ஐடோட்டோ சிஸ்டம் 12’ மூலமும் வாங்கப்பட்டன.

அடுத்ததாக, ‘குரூப் 2’ பரிசுத் தொகை 32 சீட்டுகளுக்குக் கிடைத்துள்ளது. $77,132 பரிசுத்தொகை அந்தச் சீட்டுகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும்.

குலுக்கல் முடிவுகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) இரவு 9.30 மணிக்கு வெளியிடப்படுவதற்கு முன்னரே, தீவுமுழுவதும் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கடைகளில் நீண்ட வரிசைகளைக் காணமுடிந்தது.

நெக்ஸ் கடைத்தொகுதியின் மூன்றாவது மாடியில் ‘ஃபேர்பிரைஸ்’ கடைக்கு இட்டுச்செல்லும் நீண்ட வரிசையைக் காட்டும் காணொளி ஒன்றை ரிச் ரிக் டான் என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார்.

டோட்டோ ஹொங் பாவ் குலுக்கல் 2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து அது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்