தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈராண்டுகளில் 12 சிங்போஸ்ட் கிளைகள் மூடல்

1 mins read
42de3b0b-c77d-46b3-a5b2-07c00da4b3b3
மூடப்பட்ட கிளைகளில் ஐந்து, சன்டெக் சிட்டி, நார்த்பாய்ண்ட் சிட்டி போன்ற கடைத்தொகுதிகளில் இயங்கி வந்தவை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய அஞ்சலகச் சேவை நிறுவனமான ‘சிங்கப்பூர் போஸ்ட்’ கடந்த ஈராண்டுகளில் தனது 12 அலுவலகங்களை மூடிவிட்டது.

அதாவது, தனது கிளைகளில் ஐந்தில் ஒன்றை இந்த காலகட்டத்தில் சிங்போஸ்ட் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

பெரும்பாலான மக்கள் மின்னியல் தொடர்புகளை நாடுவதால் அஞ்சல்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது சிங்போஸ்ட் கிளைகள் மூடப்பட்டதற்கு முக்கிய காரணம்.

அவ்வாறு மூடப்பட்ட கிளைகளில் ஐந்து, சன்டெக் சிட்டி, நார்த்பாய்ண்ட் சிட்டி போன்ற கடைத்தொகுதிகளில் இயங்கி வந்தவை.

எஞ்சியவற்றில் சில தனியாக இயங்கிய கிளைகள். மற்றவை, சமூக மன்றங்கள், அலுவலகக் கட்டடங்கள், வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளில் சேவையாற்றிய கிளைகள்.

மூடப்பட்டவை தவிர்த்து, சிங்போஸ்ட் வசம் தற்போது 44 அலுவலகங்கள் உள்ளன.

அஞ்சலகச் சேவை செலவு குறைந்த, பொருத்தமான சேவை என்பதைத் தொடர்ந்து நிலைநாட்டும் வகையில் சில அஞ்சலக அலுவலகங்களிலும் அவை அமைந்துள்ள இடங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக சிங்போஸ்ட் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.

மின்னிலக்க சேவைகளை நோக்கி பயனீட்டாளர்களின் தேவை விரைவாக மாறிவரும் சூழலைச் சமாளிக்க மேற்கொள்ளப்படும் வர்த்தக உருமாற்ற முயற்சிகளில் ஒரு பகுதி இது என்றும் அந்தப் பெண் பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்