சிங்கப்பூரில் 12,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ஏஐஎஸ் (AIS) எனப்படும் தானியங்கி சேர்ப்புத் திட்டத்திலிருந்தும் 2025ஆம் ஆண்டில் சரியான நேரத்தில் வரி ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை.
இந்த நிறுவனங்கள் சரியான நேரத்தில் வரி ஆவணங்களைச் செலுத்தத் தவறுவதால் கிட்டத்தட்ட 160,000 ஊழியர்கள் வரி செலுத்துவதில் தடங்கலை எதிர்நோக்குகின்றனர். மேலும் அது கணக்குகளில் தவறுகளையும் ஏற்படுத்துகிறது.
இந்தத் தகவலைச் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் திங்கட்கிழமை (பிப்ரவரி 3) வெளியிட்டது.
தொடர்ந்து தவறு செய்யும் 1,207 முதலாளிகள் 2025ஆம் ஆண்டு தண்டிக்கப்பட்டனர். அவர்கள் 1 மில்லியன் வெள்ளிக்கு மேலான அபராதத்தைச் செலுத்தினர்.
தண்டனைக்குள்ளான பெரும்பாலான நிறுவனங்கள் உணவு, பானம், மொத்த விற்பனை, கட்டுமானம் ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள்.
மார்ச் 1ஆம் தேதிக்குள் நிறுவனங்கள் அதன் ஊழியர்களின் வருமானம் தொடர்பான தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உள்நாட்டு வருவாய் ஆணையம் நினைவூட்டியது.
ஏஐஎஸ் திட்டத்தில் இருக்கும் நிறுவனங்கள் ஐந்து ஊழியர்களுக்குக் கீழ் வைத்திருந்தாலும் இது பொருந்தும்.
சரியான நேரத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறும் நிறுவனங்களுக்கு 5,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும். அதேபோல் நிறுவனத்தின் இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதமோ, 12 மாதம் வரையிலான சிறைத் தண்டனையோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
2026ஆம் ஆண்டு மட்டும் 11,000 புதிய நிறுவனங்கள் ஏஐஎஸ் திட்டத்தில் இணைந்துள்ளன. ஏஐஎஸ் திட்டத்தில் 123,000 நிறுவனங்கள் உள்ளன.

