சிங்கப்பூர்வாசிகளுக்கு 12,500 விமானப் பயணச்சீட்டுகள் இலவசம்

1 mins read
3a4fa7fe-97f1-4ce0-9715-4d354490acc2
படம்: ஏஎஃப்பி -

கேத்தே பசிபிக் விமான நிறுவனம், 12,500 விமானப் பயணச்சீட்டுகளை சிங்கப்பூர்வாசிகளுக்கு இலவசமாக வழங்கவிருக்கிறது.

அந்தப் பயணச்சீட்டுகளைக் கொண்டு, சிங்கப்பூரில் இருந்து ஹாங்காங் சென்று, மீண்டும் சிங்கப்பூர் வரலாம்.

இலவசப் பயணச்சீட்டுகளுக்கு மார்ச் 2 முதல் 8ஆம் தேதிவரை விண்ணப்பம் செய்யலாம். இதுதொடர்பான விவரங்கள் கேத்தே பசிபிக் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.

சுற்றுப்பயணிகளை ஈர்த்து, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஹாங்காங் இலவச விமானப் பயணச்சீட்டுகளை வழங்குகிறது.

'ஹலோ ஹாங்காங்' திட்டம் மூலம் 500,000 விமானப் பயணச்சீட்டுகளை இலவசமாக தருகிறது ஹாங்காங் அரசாங்கம்.