ஜனவரி 29ஆம் தேதி வியாழக்கிழமை நடந்த டோட்டோ பரிசுக் குலுக்கலில் முதல் பரிசான 13.5 மில்லியன் வெள்ளியை அறுவர் பகிர்ந்துகொள்கின்றனர்.
வெற்றி எண்கள்: 11, 13, 16, 31, 42, 48, உபரி - 21
ஜனவரி 19ஆம் தேதி குலுக்கலுக்கான முதல் பரிசு $1.3 மில்லியனாக இருந்தது. பின்னர் அது ஜனவரி 26ல் கிட்டத்தட்ட $5.9 மில்லியனாக உயர்ந்தது.
இறுதியாக ஜனவரி 29ல் அது $13,524,372ஐ எட்டியது. இதனையடுத்து, வெற்றி எண்களைக் கொண்டுள்ள ஆறு பரிசுச்சீட்டுகளை வைத்துள்ளோர்க்கும் தலா $2,254,062 வழங்கப்படும் என்று சிங்கப்பூர் பூல்ஸ் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே வரிசையில் ஆறு வெற்றி எண்களையும் கொண்ட பரிசுச்சீட்டுக்கு முதல் பரிசு (Group 1) வழங்கப்படும். வெற்றியாளர் யாரும் இல்லை எனில் அத்தொகை அடுத்த குலுக்கலுக்குச் சென்றுவிடும். இப்படியாக நான்காவது குலுக்கல்வரை செல்லலாம்.
அதன்பின்னரும் யாருக்கும் முதல் பரிசு விழவில்லை எனில், அத்தொகை இரண்டாம் பரிசு (Group 2) பெற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.

