கடலோர மீன் பண்ணையில் தீ

கடலோர மீன் பண்ணையில் தீ

1 mins read
d8c87995-a241-4f39-a744-67799c94e712
மின் உற்பத்தி சாதனத்தால் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. - படம்: சாவ்பாவ்

புலாவ் தெக்கோங்கிற்கு அருகே இருக்கும் மீன் பண்ணையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அப்பகுதியிலிருந்து பாதுகாப்பு கருதி 13 பேர் வெளியேற்றப்பட்டனர்.

மீன்பண்ணையில் இருந்த மின் உற்பத்தி சாதனத்திலிருந்து தீ பரவியதாகவும் இவ்விபத்து குறித்து தங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 11.50 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

படகு மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்ததாக அது தெரிவித்தது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அவ்விடத்திற்கு வருவதற்குள் மீன் பண்ணையில் இருந்த 13 பேரை கடலோரக் காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகள் வெளியேற்றினர்.

இவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்