முதியவரைப் படிக்கட்டில் கீழே தள்ளிவிட்ட தலைமை நிர்வாகிக்குச் சிறைத் தண்டனை

முதியவரைப் படிக்கட்டில் கீழே தள்ளிவிட்ட தலைமை நிர்வாகிக்குச் சிறைத் தண்டனை

1 mins read
6ba151d7-fed1-409d-91f7-9c78f8137abf
நீதிமன்றத்தை வந்தடைந்த குவா கியன் கியோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வயதான ஆடவர் ஒருவரைப் படிக்கட்டுகளில் தள்ளிவிட்டு காயப்படுத்தியதற்காக ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாகிக்கு ஜூலை 24ஆம் தேதி 13 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பணம் தொடர்பான விவகாரத்தில் இருவருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டதையடுத்து அந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டது.

‘கேடிஎல் குலோபல்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான 74 வயது டான் டோக் ஹானை, குவா கியன் கியோங் 2021ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி தாக்கியதாக அறியப்படுகிறது.

வழக்கு விசாரணையை அடுத்து, திரு டானுக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததன் தொடர்பில் 55 வயது குவா மீதான குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்பட்டது.

திரு டானுக்கு முகத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

தாக்குதலுக்குமுன் இரு ஆடவர்களின் குடும்பங்களுக்கும் இடையே 50 ஆண்டு நல்லுறவு இருந்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

குவா $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 7ஆம் தேதி தனது தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்