தொடர்புத்திறன் குறைபாடுள்ள 130 பேர் பகல்நேர நடவடிக்கை நிலையங்களுக்காகக் காத்திருக்கின்றனர்

தொடர்புத்திறன் குறைபாடுள்ள 130 பேர் பகல்நேர நடவடிக்கை நிலையங்களுக்காகக் காத்திருக்கின்றனர்

1 mins read
68b30f75-1b2f-447b-876f-f6a187964794
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

தொடர்புத்திறன் குறைபாடுள்ள 130 பெரியவர்கள் டிஏசி (DAC) என்று அழைக்கப்படும் பகல்நேர நடவடிக்கை நிலையங்களுக்காகக் காத்திருக்கின்றனர்.

தொடர்புத்திறன் குறைபாடுள்ளவர்களுக்காக எட்டு நிலையங்கள் சிங்கப்பூரில் உள்ளன. அந்த நிலையங்களில் இடம் கிடைக்க ஒருவருக்குச் சராசரியாக ஒன்பது மாதங்கள் தேவைப்படுகின்றன.

இந்தத் தகவலைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா புதன்கிழமை (பிப்ரவரி 4) தெரிவித்தார்.

அரசாங்கம் போதிய இடங்களை வழங்கத் தொடர்ந்து முயற்சி செய்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு பகல்நேர நடவடிக்கை நிலையங்களில் 2030ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 500 இடங்கள் சேர்க்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

சிங்கப்பூரில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நிதி உதவியுடன் 32 பகல்நேர நடவடிக்கை நிலையங்கள் செயல்படுகின்றன. அவற்றில் 1,800க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

பகல்நேர நடவடிக்கை நிலையங்களில் உடற்குறையுள்ள 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இடம் வழங்கப்படும்.

நிலையங்களில் சமூக, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மட்டும் நடக்காமல், வாழ்க்கைக்குத் தேவையான தினசரி திறன்களும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதனால் உடற்குறை உள்ளவர்கள் யார் துணையும் இல்லாமல் அவர்களது வேலையைச் செய்ய முடிகிறது.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்றம்சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுஉடற்குறையுள்ளோர்