தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அறிவிக்கப்படாத பொருள்களுக்காக 13,000 சுற்றுப்பயணிகளுக்கு $3 மி. அபராதம்

2 mins read
c687a4ac-3005-46ea-af95-312a90886f6f
பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட அறிவிக்கப்படாத புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட நகைகள். - படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை

ஜனவரி முதல் விமானம், தரை மற்றும் கடல்வழி சோதனைச் சாவடிகளில் வரி ஏய்ப்பு செய்த 13,000க்கு மேற்பட்ட சுற்றுப்பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மொத்தம், 13,099 பயணிகளுக்கு $3,471,043 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் சுங்கத்துறை நவம்பர் 15ஆம் தேதி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பிடிபட்ட 7,193 பயணிகளின் எண்ணிக்கையை விட இது கிட்டத்தட்ட இருமடங்காகும். அவர்களுக்கு மொத்தம் $2,303,380 அபராதம் விதிக்கப்பட்டது.

ஒரு சம்பவத்தில், ஒரு பையைச் சோதித்த போது, ​​அதிகாரிகள் பல்வேறு அறிவிக்கப்படாத ஆடம்பர கைப்பைகளும் அழகுச் சாதனங்களும் லண்டனில் வர்த்தகப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பெண் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

மற்றவர்களுக்குப் பரிசுப் பொருள்களாகக் கொடுக்கப்பட கொண்டு வரப்பட்டஅந்தக் கைப்பைகளும் அழகுப் பொருள்களில் புகழ்பெற்ற வர்த்தகச் சின்னங்களான Louis Vuitton, Prada, Yves Saint Laurent, Dior and Balenciaga போன்றவையும் Labubu உருவச் சிலைகளும் இருந்தன.

அவருக்கு $5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பொருள், சேவை வரியாக (ஜிஎஸ்டி) $3,963.69 செலுத்த வேண்டியிருந்தது.

ஜிஎஸ்டி நிவாரண வரம்புகளைப் பற்றி தனக்குத் தெரியும் என்று அந்தப் பயணி ஒப்புக்கொண்டார். ஆனால் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான பொருள்களுக்கு மட்டுமே அறிவிப்பு தேவை என்று அவர் தவறாகப் புரிந்துகொண்டார் என்று சிங்கப்பூர் சுங்கத் துறையின் அறிக்கை கூறியது.

மற்றொரு சம்பவம், சிங்கப்பூர் கப்பல் பயண மையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட ஒரு பெண் சம்பந்தப்பட்டது.

மீண்டும் மீண்டும் குற்றமிழைத்த அந்த பெண், வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட மற்றும் புதிய தங்க நகைகளுடன் பிடிபட்டார்.

அவருக்கு $1,935 அபராதம் விதிக்கப்பட்டதுடன், அந்தப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி தொகையாக $96.95யும் செலுத்தினார்.

2024ல் இதுவரை நடந்த சம்பவங்களில், சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் தவறான அல்லது முழுமையற்ற தகவல்களை அளித்ததற்காக, 46 குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக $5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சுங்கச் சட்டத்தின்கீழ், வரி ஏய்ப்பு செய்வதாகக் கண்டறியப்பட்ட ஒருவருக்கு வரி மற்றும் ஜிஎஸ்டி ஏய்ப்பு தொகையின் 20 மடங்கு வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்