$13 மில்லியன் டோட்டோ குலுக்கல்: இருவருக்கு தலா $6.6 மில்லியன் பரிசு

$13 மில்லியன் டோட்டோ குலுக்கல்: இருவருக்கு தலா $6.6 மில்லியன் பரிசு

1 mins read
f431b2a6-a47d-486d-82da-a64e9468ed86
திங்கட்கிழமை (அக்டோபர் 21) டோட்டோ குலுக்கலை முன்னிட்டு குலுக்கல் சீட்டு வாங்க தோ பாயோவில் வரிசையில் நிற்கும் மக்கள். - படம்: சாவ் பாவ்

திங்கட்கிழமை (அக்டோபர் 21) இரவு நடைபெற்ற டோட்டோ குலுக்கலில் இரு அதிர்ஷ்டசாலிகள் தலா $6.6 மில்லியனுக்கும் அதிக பரிசுத் தொகையை வென்றுள்ளனர்.

திங்கட்கிழமை குலுக்கலுக்கு முந்தைய மூன்று டோட்டோ குலுக்கல்களில் எவரும் முதல் பரிசை (Group 1) வெல்லவில்லை. இதனால் பரிசுத் தொகை $13,214,250க்குக் கூடியது.

கடைசியாக மே மாதத்தில்தான் முதல் பரிசுத் தொகை $10 மில்லியனுக்குமேல் உயர்ந்திருந்தது. அப்போது ஒரேயோர் அதிர்ஷ்டசாலி $13.12 மில்லியனை வென்றிருந்தார்.

திங்கட்கிழமை குலுக்கலுக்கான வெற்றி எண்கள் 4, 13, 19, 44, 46 மற்றும் 49. உபரி எண் 31.

சிங்கப்பூர் பூல்ஸ் இணையப்பக்கத்தின்படி, திங்கட்கிழமை குலுக்கலுக்கான வெற்றி குலுக்கல் சீட்டுகளில் ஒன்று, ‘சிஸ்டம் 7’ மூலம் இணையத்தில் வாங்கப்பட்டது.

புளோக் 685 ஹவ்காங் ஸ்திரீட் 61ல் உள்ள பிரபல ‘தோங் அய்க் ஹுவாட்’ கடையில் மற்றொரு சீட்டு வாங்கப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் திங்கட்கிழமை குலுக்கல் உட்பட நான்கு குலுக்கல்களில் அந்தக் கடை வெற்றிப் பரிசை வழங்கியுள்ளது.

இதற்கிடையே, திங்கட்கிழமை குலுக்கலில் 22 பேர் இரண்டாம் பரிசை (Group 2) வென்றுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் $72,422 கிடைத்தது.

குறிப்புச் சொற்கள்