வேகமாக வளர்ந்து வரும் துறைகளைச் சேர்ந்த 14 உள்ளூர் நிறுவனங்கள் ஃபோர்ப்ஸ் ஏஷியா 2025ன் ‘காண வேண்டிய 100 நிறுவனங்கள்’ பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பட்டியல் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) வெளியிடப்பட்டது.
ஆசியா பசிபிக்கைச் சேர்ந்த, சொல்லிக்கொள்ளும் வகையில் செயல்படும் வளர்ந்து வரும் சிறு நிறுவனங்களும் புதிய நிறுவனங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
செயற்கை நுண்ணறிவு, ‘டீப்’ தொழில்நுட்ப ஆற்றல் கொண்ட நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பட்டியலில் 18 நிறுவனங்களுடன் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
14 நிறுவனங்களுடன் சிங்கப்பூரும் ஜப்பானும் இரண்டாம் நிலையில் உள்ளன.
ஒன்பது நிறுவனங்களுடன் சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது.

