செங்காங்கில் 14 வயது சிறுமியைக் காணவில்லை: காவல்துறை அறிவிப்பு

1 mins read
84199703-bdec-4345-a0c1-a72d3a3a345b
கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 15) கடைசியாக புளோக் 203A கம்பஸ்வேல் ரோட்டில் லீ சுவான் செரீன் காணப்பட்டார். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

திங்கட்கிழமை (டிசம்பர் 15) அதிகாலை 2.30 மணிக்கு புளோக் 203A செங்காங் கம்பஸ்வேல் ரோட்டில் கடைசியாகக் காணப்பட்ட 14 வயது லீ சுவான் செரீன் என்ற சிறுமியைக் காணவில்லை.

அவரைப் பற்றிய தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்புகொள்ளும்படி காவல்துறை அதேநாளில் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

தகவல் அறிந்தோர் காவல்துறையை 1800-255-0000 என்ற எண்ணில் நேரடியாக அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணையப்பக்கத்தில் விவரங்களைப் பதிவிடலாம்.

அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் எனவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்