உள்ளூர் டெங்கி தொற்றால் 2024ஆம் ஆண்டில் 15 பேர் மரணமடைந்தனர். ஆனால் 2023ஆம் ஆண்டு முழுவதும் மரணங்களின் எண்ணிக்கை ஆறு ஆக இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது டெங்கியால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் இரண்டு மடங்குக்கு அதிகரித்துள்ளது.
2024ஆம் ஆண்டில் டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 12,736. 2023ஆம் ஆண்டில் 9,949 ஆகவும் 2022ஆம் ஆண்டில் 32,173 ஆகவும் டெங்கிச் சம்பவங்கள் பதிவாகின.

