புகையிலைப் பொருள்களுக்கான வரி 15% அதிகரிப்பு

புகையிலைப் பொருள்களுக்கான வரி 15% அதிகரிப்பு

1 mins read
5b14fab6-5644-4944-9cd2-298435fa72b8
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று முதல் (பிப்ரவரி 14) அனைத்து வகையான புகையிலைப் பொருள்களுக்கான வரி 15 விழுக்காடு அதிகரிக்கப்படுகிறது.

இன்று (14-02-2023) நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதைக் குறைப்பதற்கே என்று தெரிவிக்கப்பட்டது.

வரி அதிகரிக்கப்படுவதால் ஒவ்வோர் ஆண்டும் அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட 100 மில்லியன் வெள்ளி கூடுதலாக வருமானம் கிடைக்கும் என்று திரு வோங் தெரிவித்தார்.