இரு மாதகாலமாக தம் 11 வயது வளர்ப்பு மகளைப் பல்வேறு பாலியல் செயல்களுக்கு ஆடவர் ஒருவர் வலுக்கட்டாயப்படுத்தினார்.
தாமும் அச்சிறுமியின் தாயா[Ϟ]ரும் பாலியல் உறவில் ஈடுபடுவதைக் காணொளி எடுக்குமாறும் அச்சிறுமியிடம் அந்த ஆடவர் கூறினார்.
அந்த 29 வயது ஆடவருக்கு திங்கட்கிழமை (பிப்ரவரி 24) 15 ஆண்டுச் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த[Ϟ]போது பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி எய்டன் ஸூ, அந்த ஆடவரின் வெறுக்கத்தக்க, படுமோசமான செயல்களால் அச்சிறுமி அப்பாவித்தனத்தை இழந்ததாகக் கூறினார்.
அச்சிறுமியின் தாயாருடன் அந்த ஆடவர் பாலியல் உறவு கொள்வதைப் படமெடுக்கச் சொன்னபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்குப் பதிலாக, தமக்கு இம்முறை பாலியல் வன்கொடுமை நடக்காது என்பதை எண்ணி அச்சிறுமி நிம்மதியடைந்தது, ‘மனமுடையச் செய்வதாக’ நீதிபதி ஸூ வேதனை தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வன்கொடுமையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த துணைப்பாட ஆசிரியரையும் சமூக ஊழி[Ϟ]யரையும் நீதிபதி ஸூ பாராட்டினார்.
நீதிபதியின் கேள்விகளுக்குப் பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேத்தி சூ, இப்போது 13 வயதாகும் அச்சிறுமி அவருடைய தாயாருடன் வசிப்பதாகத் தெரிவித்தார். அவரின் தாயார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் சொன்னார்.