சிங்கப்பூரின் 15வது நாடாளுமன்றம் செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கும். அப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிப் பிரமாணத்தை எடுத்துக்கொள்வர்.
முதலில் நாடாளுமன்ற நாயகர் தேர்தல் நடைபெறும். அதன் பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியேற்புடன் கூட்டம் தொடங்கும் என்று அவைத் தலைவர் இந்திராணி ராஜா, ஜூன் 13ஆம் தேதி வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அமர்வில், அதிபர் தர்மன் சண்முகரத்னம் அரசாங்கத்தின் முன்னுரிமைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை விவரிக்கும் தொடக்க உரையை நிகழ்த்துவார்.
இதைத் தொடர்ந்து செப்டம்பர் 22 முதல் 26 வரை அதிபரின் உரை மீதான விவாதம் நடைபெறும்.