கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திய சிறுவன்

கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திய சிறுவன்

1 mins read
f3aee014-528b-481f-82ba-488fec58d36e
படம்: சமூகஊடகம் -
Google News Preferred Icon

பதினாறு வயது சிறுவன் மீது கத்தியைக் காண்பித்து மிரட்டியதாக மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்தச் சிறுவன் கத்தியைக் காண்பித்து ஒருவருக்கு அச்சம் ஏற்படுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. சிறுவனின் வயது காரணமாக குற்றம் சட்டப்பட்டவரின் பெயரைக் குறிப்பிட இயலாது.

அந்தச் சிறுவன் வெள்ளிக்கிழமையன்று அங் மோ கியோ அெவன்யூ 3ல் உள்ள புளோக் 427ல் இரவு சுமார் 10.30 மணிக்கு இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் தொடர்பில் 'சிங்கப்பூர் இன்சிடன்ஸ்' என்று இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் காவல்துறை அதிகாரிகள் சிலர் பரபரப்பான போக்குவரத்து நிலவும் சாலை ஒன்றில் ஒருவரை எதிர்கொள்வது தெரிகிறது.

பின்னர் அந்த நபர் போக்குவரத்துக்கு எதிராக சாலையில் ஓட்டம் பிடிக்க காவல்துறை அதிகாரிகள் அவரைத் துரத்துகின்றனர்.

அந்தச் சிறுவனை சாங்கி சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் விசாரணைக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சிறுவன் மீதான குற்றச்சாட்டு மீண்டும் இம்மாதம் 23ஆம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

குறிப்புச் சொற்கள்
கைதுவழக்குசிங்கப்பூர்