பதின்மவயது ஆண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஆடவருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் திங்கட்கிழமை (மார்ச் 24) விதிக்கப்பட்டன.
அந்த ஆடவர் ஒரு பேருந்து ஆர்வலர் என்று அது தொடர்பான பொழுதுபோக்குக் குழுவில் இருந்த சிறுவர்கள் அவரது செயல்களால் பாதிப்படைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய வகை, பழைய வகை, வழக்கத்துக்கு மாறான பாதைகளில் சேவை வழங்கும் பேருந்துகள் ஆகியவற்றை இக்குழுவினர் ஒன்றாகப் பார்த்து ரசிப்பது, பழைய பேருந்து வகை வழக்கம்.
பாலியல் குற்றங்களைப் புரிந்த ஆடவருக்குத் தற்போது 25 வயது.
2018ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் ஐந்து சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார்.
பாதிக்கப்பட்டவர்கள் அப்போது 13 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
பேருந்து ஆர்வலர் பொழுதுபோக்குக் குழுவின் உறுப்பினர் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்த பிறகு, ஆடவரின் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
பாலியல் துன்புறுத்தல் குறித்து அந்த உறுப்பினரிடம் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தெரிவித்ததாக அறியப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தைக் காக்க அவர்களது பெயர்களையும் குற்றம் புரிந்த ஆடவரின் பெயரையும் வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.