லோயாங்கில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) காலை அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
அதில் 18 வயது இளையர் மாண்டார். விபத்தை நிகழ்த்திவிட்டு ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
விபத்து குறித்து காலை 9.20 மணிக்கு தங்களுக்கு தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
விபத்து லோயாங் அவென்யூ, கிரான்வெல் ரோடு சந்திப்பில் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் 18 வயது இளையர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.