சிங்கப்பூரின் மிகப் பெரிய கடல் புல்வெளிகளில் ஒன்றான சாங்கி கடல் புல்வெளிகளைப் பாதுகாக்க மாற்றங்கள் செய்யப்பட்டு, விமானத்துறை பூங்காவை உருவாக்க சாங்கியிலிருந்து சுமார் 193 ஹெக்டர் நிலம் மீட்கப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்குத் தெரிய வந்துள்ளது.
சாங்கி கடற்கரைப் பூங்காவிற்கும் சாங்கி பே பகுதிக்கு அருகிலுள்ள விமானத் துறை பூங்காவுக்கும் இடையிலான பகுதி, கரையோரப் பூந்தோட்டத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பெரியது.
மீட்டெடுக்கப்பட்ட பகுதி, சிங்கப்பூரின் எதிர்கால பொருளியல் வளர்ச்சியை ஆதரிக்கவும், நீண்டகால தொழில்துறை நிலப் பயன்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பயன்படுத்தப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) ஜூலை 1ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
நீல மீட்புப் பணிக்கு எந்த காலக்கெடுவும் கொடுக்கப்படவில்லை.
சாங்கி விமானத்துறை பூங்காவின் ஆற்றலை அதிகரிக்கவும், வட்டார விமானத் துறை சரக்கு மையமாக சாங்கி விமான நிலையத்தின் பங்கை அதிகரிக்கவும், 2030ஆம் ஆண்டு முதல் இரண்டாவது விமான நிலைய தளவாடப் பூங்காவை அமைக்கும் திட்டங்களை அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது.
விமான நிலைய தளவாடப் பூங்கா என்பது விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியாகும். இது விமானச் சரக்கின் நடமாட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் பொருள்களைப் பதப்படுத்துவதற்கான செலவுகளையும் போக்குவரத்து நேரத்தையும் குறைக்கிறது.
திட்டப்பணிகளின் மூலம் பவளப்பாறைகள் மற்றும் கடல் புல்லில் ஏற்படும் சாத்தியமான தாக்கத்தையும், இந்த வாழ்விடங்களில் செழித்து வளரும் பல்லுயிர் பெருக்கத்தையும் தீர்மானிக்க, வீவக ஒரு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை நியமித்திருந்தது.
திட்டத்திற்கு அருகிலும் அதற்குள்ளும் உள்ள மனிதர்கள், வனவிலங்குகள், கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளைப் புரிந்துகொள்வதற்கான ஆய்வுகள் ஏப்ரல் 2022 முதல் மே 2023 வரை நடந்தன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் மிகப்பெரிய கடற்கரைப் பூங்காக்களில் ஒன்று என்று நிபுணர்கள் கூறியுள்ள சாங்கி கடற்கரைப் பூங்காவிற்கு அருகிலுள்ள கடல் புல்வெளிக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்க இந்தத் திட்டத்தின் பரப்பளவு குறைக்கப்படும் என்று வீவக தெரிவித்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக சிங்கப்பூரின் வளர்ச்சியை வழிநடத்தும் 2021 நீண்டகால திட்டத்தின் கீழ் மீட்டெடுக்கப்பட வேண்டிய பகுதி பெரியது என்றும் வீவக தெரிவித்துள்ளது.
ஆனால் அது கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு அல்லது 45 ஹெக்டர் குறைக்கப்பட்டது.
மறுசீரமைப்புப் பணிகள் முடிந்ததும், திருத்தப்பட்ட கடலோர அம்சங்களால் எழும் அமைதியான நீர் நிலைமைகள் காரணமாக சாங்கி கடற்கரைப் பூங்காவிற்கு வருபவர்களுக்கு கடல் சார்ந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மீட்புப் பணிகளின் தாக்கங்களைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை ஆய்வாளர்கள் பாராட்டினர்.
ஆனால் திட்டத்தின் விளைவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைக் கவனமாகச் செயல்படுத்தவும், அதன் தாக்கங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.