ஜூரோங் வட்டாரத்தில் ஆடவர் ஒருவர் சமய போதனை சார்ந்த வசனங்கள் எழுதப்பட்ட பதாகை ஒன்றைத் தனது கழுத்தில் அணிந்தவாறு அமர்ந்திருந்தார்.
தகுந்த அனுமதி இல்லாமல் பொது இடத்தில் சமய போதனை சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆடவருக்கு $1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பெய் டெக் ஹோ என்னும் 59 வயது ஆடவர் ஃபாலுன்கோங் (Falungong) என்ற கருத்தியலைப் பின்பற்றும் வாக்கியங்களை எழுதியிருந்த பதாகையைத் தமது கழுத்தில் அணிந்திருந்தார்
இச்சம்பவம் 2023 ஜூலை 5ஆம் தேதி சைன்ஸ் சென்டர் ரோடு அருகே உள்ள புல்வெளியில் நடந்தது.
காலை 9.30 மணிவாக்கில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் பெய்யைத் பதாகையுடன் கண்டனர்.
அதன்பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் பெ, ஒரு பேருந்து ஓட்டுநர் என்பது தெரியவந்தது.
பொது இடத்தில் தகுந்த அனுமதி இல்லாமல் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு $3,000 வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

