தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லிட்டில் இந்தியாவில் எழுவர் கைது; $1 மில்லியன் பறிமுதல்

1 mins read
e4dc2c0c-6a3e-49ef-a32d-bc504c6775f0
படம்: காவல்துறை -

லிட்டில் இந்தியா பகுதியில் உரிமமற்ற கட்டண சேவை தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் எழுவர் கைது செய்யப்பட்டதுடன் $1 மில்லியனுக்கும் அதிகமான தொகையும் கைப்பற்றப்பட்டது.

மே 5 முதல் 11 வரை வீராசாமி சாலை, அப்பர் டிக்சன் சாலையில் உள்ள இரு அலுவலகங்களில் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

26 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள், சிங்கப்பூர் நாணய ஆணையத் தின் உரிமமின்றி, எல்லை தாண்டிய பணப் பரிமாற்றச் சேவையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

ரொக்கத்துடன் எட்டு கைப்பேசி, மூன்று பணப் எண்ணும் இயந்திரங்கள், பணம் அனுப்பிய பதிவுகள் ஆகியன வும் கைப்பற்றப்பட்டன. உரிமம் இன்றி, எல்லை தாண்டிய பணப் பரிமாற்ற சேவை போன்ற கட்டணச் சேவைகளை தனி மனிதர் வழங்குவது குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டு வரை சிறை, $125,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்