'ஆப்பிள்' நிறுவனத்தின் பிரபலமான சாதனங்களில் ஒன்றான 'ஏர்போட்’ சாதனத்தை மோசடி செய்து விற்றதாக சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலிஸ் கிறிஸ்மஸ் நாளன்று கொடுத்த தகவல்படி, கடந்த சனிக்கிழமையும் திங்கட்கிழமையும் இணைய விளம்பரத்தின் வழி இந்த போலி ‘ஏர்போட்’ சாதனங்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் புகார் கொடுத்திருந்தனர்.
பிடோக் போலிஸ் பிரிவின் தகவல்படி, இரு ஆடவர்கள் இதன் தொடர்பில் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவருக்கு 23 வயது, மற்றொருவருக்கு 19 வயது.
இந்த மோசடி சம்பவம் குறித்த போலிஸ் விசாரணை தொடர்கிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஒருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
அப்படி இணையத்தில் விற்கப்படும் பொருள் வழக்கத்திற்கு மாறாக மிகக் குறைந்த விலையில் விளம்பரப்படுத்தப்பட்டால், எச்சரிக்கையுடன் செயல்பட பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.