காட்டுப் பகுதியில் தொலைந்துபோன இருவர் கண்டுபிடிக்கப்பட்டனர்

காட்டுப் பகுதியில் தொலைந்துபோன இருவர் கண்டுபிடிக்கப்பட்டனர்

1 mins read
664d2dde-02de-4b8a-8d04-2be852fc8f7a
மெரின் சாலைக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் தொலைந்துபோன அந்த இருவரும் (இடக்கோடி), காயமின்றி கண்டுபிடிக்கப்பட்டனர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை/ஃபேஸ்புக்

பிப்ரவரி 24ஆம் தேதி காலை காணாமல்போன இரண்டு பேர் ஒரு மணி நேர தேடல் நடவடிக்கைக்குப் பிறகு காவல்துறையினராலும் குர்கா படையினராலும் கண்டுபிடிக்கப்பட்டனர்.

விட்லி சாலைக்கு அப்பால், மெரின் சாலைக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் அந்த இருவரும் காணாமல்போனதாக காலை 11.40 மணிவாக்கில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பிப்ரவரி 24ஆம் தேதி காவல்துறையினர், ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தனர்.

“தங்ளின் காவல் பிரிவும், குர்கா படையும் காணாமல்போனவர்களைத் தேட பணியில் அமர்த்தப்பட்டன,” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டது.

இருவரும் பிற்பகல் 12.55 மணிக்கு காயங்களின்றி காணப்பட்டதாக காவல்துறை கூறியது.

மலையேறிகளான அந்த இருவர் குறித்து காவல்துறை மேல்விவரங்களை வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்