சிங்கப்பூருக்குப் புறப்படவிருந்த ஸ்கூட் விமானத்தில் மின்தேக்கி தீப்பிடித்ததில் இருவர் காயம்

சிங்கப்பூருக்குப் புறப்படவிருந்த ஸ்கூட் விமானத்தில் மின்தேக்கி தீப்பிடித்ததில் இருவர் காயம்

1 mins read
0ca9c659-93aa-4945-b9db-555301042501
விமானத்தினுள் புகை மூண்டதாக சமூக ஊடகங்களில் வலம் வந்த படங்கள் காண்பித்தன. படங்கள்: வாங்ஹாவ்யு/ஃபேஸ்புக் -

தைவானின் தாவ்யுவான் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜனவரி 10) இரவு 7.35 மணிக்கு சிங்கப்பூருக்குப் புறப்படவிருந்த ஸ்கூட் விமானத்தில் மின்தேக்கி (power bank) சூடுபிடித்து தீப்பிடித்துக்கொண்டது. இதில் பயணிகள் இருவர் காயமடைந்தனர்.

விமான நிலைய அதிகாரிகளுக்கு இரவு 7.40 மணியளவில் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தீயணைப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தீ அணைக்கப்பட்ட பிறகு டிஆர்993 விமானம் ஓடுதளத்திலிருந்து விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது.

விமானத்தினுள் புகை மூண்டதாக சமூக ஊடகங்களில் வலம் வந்த படங்கள் காண்பித்தன.

காயமடைந்த பயணிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவையில்லை என மதிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் பயணத்தைத் தொடர முடிவு செய்தனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் மின்தேக்கிக்குச் சொந்தக்காரர். மற்றொருவர் அவருடன் பயணம் செய்தவர். இருவருடைய கைவிரல்களில் இலேசான தீக்காயம் ஏற்பட்டதால் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால், பயணிகளுக்கு வேண்டிய வசதிகளும் உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இச்சம்பவத்துக்கு ஸ்கூட் நிறுவனம் வருத்தம் தெரிவித்துக்கொண்டது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அது தெரிவித்தது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக அது கூறியது.