https://www.straitstimes.com/singapore/courts-crime/2-months-jail-for-former-peoples-association-employee-who-misappropriated-over-8k
மக்கள் கழகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது 8,000 வெள்ளிக்கு அதிகமான தொகையைக் கையாடல் செய்த குற்றத்திற்காகப் பெண் ஒருவருக்கு இரண்டு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மஸ்லினா முகம்மது யூசோஃப் என்னும் 30 வயது பெண்ணுக்குச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) நம்பிக்கை துரோகம் செய்ததற்காகத் தண்டனை விதிக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மஸ்லினா, மக்கள் கழகத்தில் சேர்ந்தார். பின்னர் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குடியிருப்பாளர் குழுவின் மேலாளராக அவர் பொறுப்பேற்றார்.
குடியிருப்பாளர் குழுவின் மேலாளராக இருக்கும்போது மஸ்லினாவுக்கு சேவைகளுக்கான நிதிகளைக் கையாண்டார்.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ரொக்க வழங்கீடுகளை மஸ்லினா கையாடல் செய்தார்.
அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மஸ்லினா 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்வரை 8,375 வெள்ளி கையாடல் செய்தது உறுதியானது.
நம்பிக்கை துரோகம் செய்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.