எண் 338, ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உள்ள ஒரு ஷெல் பெட்ரோல் நிலையத்தில் கடைசியாக காணப்பட்ட சிறப்புத் தேவையுடைய ஆடவர் ஒருவரின் விவரங்களை காவல்துறை தேடுகிறது.
அக்டோபர் 5 (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.10 மணியளவில் அந்த இடத்தில் 20 வயது ஜோஷுவா கோ ஜி யாங் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது.
மனஇறுக்கத்தால் பாதிக்கப்பட்ட அவர், கறுப்புநிற டி-சட்டையும் சாம்பல் நிற அரைக்கால் சட்டையும் செருப்பும் அணிந்திருந்ததாக அறியப்படுகிறது.
தகவல் அறிந்தோர் 1800-255-0000 எனும் எண்ணில் காவல்துறையுடன் தொடர்புகொள்ளலாம். அல்லது www.police.gov.sg/i-witness எனும் இணையப்பக்கத்தில் தகவல் தெரிவிக்கலாம். தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும்.