தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கஸ்கெடன் சாலை அடிதடி சம்பவம்: இளையரிடம் விசாரணை

1 mins read
b67711ff-ac3f-4728-a3a6-4fad5170fc1e
படம்: SG.SHARES/இன்ஸ்டாகிராம் -

கஸ்கெடன் சாலையில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட அடிதடி சண்டையின் தொடர்பில் 20 வயது ஆடவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

சம்பவம் குறித்து காவல்துறைக்கு நள்ளிரவு தாண்டி 2.50 மணியளவில் அழைப்பு வந்தது. சண்டையில் யாருக்காவது காயம் ஏற்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் எதுவும் தெரிவிக்கவில்லை

மிங் ஆர்கேட் கடைத்தொகுதிக்கு வெளியே கும்பல் ஒன்று சண்டைபோடும் காணொளி சமூகத் தளங்களில் பகிரப்பட்டது. அதில் கறுப்பு நிற சட்டை அணிந்திருந்த ஆடவர் ஒருவரை நான்கு பேர் தாக்குவது தெரிகிறது. சண்டையின்போது பெண் ஒருவர் தரையில் தள்ளப்பட்டார். இறுதியில் ஆடவரின் தலையை ஒருவர் உதைப்பதும் காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.