20 ஆண்டு காத்திருப்பு: ஐவர் கொண்ட குடும்பத்துக்குத் தேசிய தின அணிவகுப்பு நுழைவுச்சீட்டுகள்

20 ஆண்டு காத்திருப்பு: ஐவர் கொண்ட குடும்பத்துக்குத் தேசிய தின அணிவகுப்பு நுழைவுச்சீட்டுகள்

1 mins read
24b6b57f-41cc-4f7e-98f0-4597bcdfe8ee
பாடாங்கைவிட (படம்) தேசிய விளையாட்டரங்கில் கூடுதலாக 15,000 பேர் அமர முடியும். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து முயன்றும் தேசிய தின அணிவகுப்புக்கு நுழைவுச்சீட்டுகள் கிடைக்காத நிலையில், இம்முறை தமது குடும்பத்துக்கு நுழைவுச்சீட்டுகள் கிடைத்துள்ளதால் மிகுந்த அதிர்ஷ்டமாக உணர்வதாக கிடங்கு உதவியாளர் ஆங் ரெட் சீ, 38, கூறினார்.

தேசிய தினமான ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறும் அணிவகுப்புக்கான நுழைவுச்சீட்டுகள் திரு ஆங்கின் இரண்டு சகோதரிகளுக்கும் அவர்களின் தந்தைக்கும் கிடைத்துள்ளன. திரு ஆங்கிற்கும் அவரின் தாயாருக்கும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது முன்னோட்டக் காட்சியில் கலந்துகொள்வதற்கான நுழைவுச்சீட்டுகள் கிடைத்துள்ளன.

அவர்கள் ஐந்து பேரும் தலா இரண்டு நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பித்திருந்ததால், அவர்கள் ஒவ்வொருவரும் தம்முடன் ஒருவரை அழைத்துச் செல்ல முடியும். இதன்மூலம், ஐந்து பேர் கொண்ட ஆங் குடும்பத்தினர் விரும்பினால், ஆகஸ்ட் 9 அணிவகுப்பை ஒன்றாகச் சேர்ந்து பார்க்க முடியும்.

கடந்த 2007முதல் நுழைவுச்சீட்டுகளுக்காக தாங்கள் விண்ணப்பித்து வந்துள்ளதாகவும் மூன்று உடன்பிறப்புகளும் நேரடியாகத் தேசிய தின அணிவகுப்பைக் காண்பது இதுவே முதல் முறை என்றும் திரு ஆங் கூறினார்.

பாடாங்கைவிட தேசிய விளையாட்டரங்கில் கூடுதலாக 15,000 பேர் அமர முடியும் என்பதே தமது குடும்பத்துக்கு நுழைவுச்சீட்டுகள் கிடைத்திருப்பதற்குக் காரணம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்