பாலர்களுக்கு புதிதாக 15,000 இடங்கள்

பாலர்களுக்கு புதிதாக 15,000 இடங்கள்

1 mins read
d1671686-602c-4f6e-b506-37685d1f4994
-

மக்கள் செயல் கட்சியின் அறப் பணி அமைப்பான மசெக சமூக அறநிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 15,000 பாலர்பள்ளி இடங்களை உரு வாக்கித் தரவிருக்கிறது. அளவில் பெரிய பாலர் பள்ளி களைக் கட்டுவது மூலமாகவும் இப்போதுள்ள பள்ளிகளை மேம் படுத்துவதன் வழியாகவும் அது இதனைச் செய்யும்.

இந்த அறநிறுவனம், 'ஸ்பார்க் கில்டாட்ஸ்' பாலர் பள்ளிகளை நடத்தி வருகிறது. புதிதாக பாலர் களுக்கு இடங்களை உருவாக்கு வதோடு, தன்னுடைய ஆசிரியர் கள், ஊழியர்கள் மேம்படவும் அவர்கள் புதியனவற்றைக் கற்றுக் கொள்ளவும் இந்த அறநிறுவனம் ஏற்பாடுகளைச் செய்யும். பிரதமர் லீ சியன் லூங் நேற்று இந்த விவரங்களை அறிவித்தார். இந்த அறநிறுவனத்தின் வருடாந் திர குடும்ப நாள் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். சிங்கப்பூரில் இளம் குடும்பங் கள் வாழ்க்கைச் செலவைச் சமா ளிக்க உதவும் முக்கியமான வழி களில் ஒன்றாக, அரசாங்கமும் மசெக சமூக அறநிறுவனமும் கட் டுப்படியாகக்கூடிய உயர் தரமிக்க பாலர் பள்ளிக் கல்வியை வழங்கி வருவதாக திரு லீ குறிப்பிட்டார்.

மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனத்தின் குடும்ப நாள் நிகழ் வின் ஒரு பகுதியாக கரையோரப் பூந்தோட்டங்களின் மலர்கள் சூழ்ந்த பகுதியில் குடும்பம் குடும்பமாக வந்திருந்தோரைச் சந்தித்து உரையாடினார் பிரதமர் லீ சியன் லூங். படம்: வான் பாவ்