தரவுத்தள பாதுகாப்பு மேம்பாடு: பொதுமக்கள் கருத்துரைக்கலாம்

தரவுத்தள பாதுகாப்பு மேம்பாடு: பொதுமக்கள் கருத்துரைக்கலாம்

2 mins read

சிங்ஹெல்த் நோயாளிகள் கிட்டத் தட்ட 1.5 மில்லியன் பேரின் தனிப்பட்ட விவரங்கள் இணையம் வழியாகத் திருடப்பட்ட விவகாரம் குறித்து நான்கு உறுப்பினர்கள் அடங்கிய விசாரணைக் குழு இம்மாதம் 21ஆம் தேதி வெள்ளிக் கிழமை தனது விசாரணையைத் தொடங்கவிருக்கிறது. இரு வாரங்களுக்கு, அதாவது அக்டோபர் 5ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தின் 'நீதிமன்றம் 5ஏ'ல் விசாரணை இடம்பெறும். தனிப்பட்ட முறையிலும் பொது மக்கள் பங்குகொள்ளும் விதத் திலும் இந்த விசாரணை இடம் பெறும்.

எந்தெந்த நாட்களில் நடக்கும் விசாரணையில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என்பது போன்ற விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும். இணையப் பாதுகாப்பு நிபுணர் கள் உள்ளிட்டோரும் விசாரணை யின்போது அழைக்கப்படுவர். சிங் ஹெல்த் நோயாளிகளின் விவரங் கள் அடங்கிய தரவுத்தளம், பொதுத் துறை கணினி அமைப்புகளில் இருக்கும் பெரிய அளவிலான தரவுத்தளங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை மேம்படுத்துவது உள் ளிட்ட பல விஷயங்களில் அவர் களின் கருத்துகள் பெறப்படும்.

எழுத்துபூர்வப் பரிந்துரை களைச் சமர்ப்பிக்கும்படி அவர் களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அதோடு, விசாரணைக் குழு முன் முன்னிலையாகி சான்றளிக்க விருப்பமா எனக் குறிப்பிடும்படியும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுவர். கடந்த ஜூன் 27ஆம் தேதி முதல் ஜூலை 4ஆம் தேதி வரை சிங்ஹெல்த் நிறுவனத்தின் கணி னிகள் ஊடுருவப்பட்டன. இதுவே சிங்கப்பூரின் ஆக மோச மான இணையத் தாக்குதல் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ந்த சம்பவங்கள், ஊடுரு வலுக்கு வித்திட்ட காரணங்கள் போன்றவை குறித்து விசாரிப்ப தற்காக முன்னாள் தலைமை மாவட்ட நீதிபதி ரிச்சர்ட் மேக்னஸ் தலைமையிலான விசாரணைக் குழு ஜூலை 24ஆம் தேதி கூடியது.