சமூகத்திற்குத் திருப்பித் தருவதில் உறுதியாக இருக்கும் ஸ்கூலிங்

சமூகத்திற்குத் திருப்பித் தருவதில் உறுதியாக இருக்கும் ஸ்கூலிங்

1 mins read
fa30c8a2-37f0-4eed-a974-caf57e6553a9
-

ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று தந்த நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங், 23 (நாற்காலியில் அமர்ந்திருப்பவர்), தெமாசெக் மன்ற நீச்சல் குளத்தில் 'கேர் சிங்கப்பூர்' அமைப்பைச் சேர்ந்த 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 12 சிறாரிடம் தமது அனுபவங்களை நேற்று பகிர்ந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் 'ஸ்விம் ஸ்கூலிங்', 'ஸ்போர்ட் கேர்ஸ்' ஆகியவற்றைச் சேர்ந்த நீச்சல் பயிற்றுநர்கள் அறுவரும் கலந்துகொண்டனர். பின்னர் சமுதாய சேவைப் பயனீட்டாளர்கள், சமூகப் பங்காளிகள், நன்கொடை ஆதரவாளர்கள் ஆகியோருக்காக நேற்றிரவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இரவு விருந்திலும் கலந்துகொண்ட ஸ்கூலிங், "எனது கனவுகளை நனவாக்க சமூகம் எனக்கு பெரும் ஆதரவும் உதவியும் வழங்கியுள்ளதால் சமூகத்திற்குத் திருப்பித் தர வேண்டும் என்பதில் எப்போதுமே நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்," என்று சொன்னார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்