துவாஸ் சோதனைச் சாவடியில் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள், 1,041 சிகரெட் பெட்டிகளைக் கடத்த முயன்ற 35 வயது ஆடவரை கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்றில் ஒளித்து வைக் கப்பட்டிருந்த அந்த சிகரெட் பெட்டிகளை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். பிடிப்பட்ட ஆடவருடன் அவருடைய மனைவியும் மகனும் இருந்ததாகவும் ஆணையம் தெரிவித்தது.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது. இதற்கிடையே, துவாஸ் வியூ பிளேசிலுள்ள வர்த் தக கட்டடத்தில் கடந்த செவ் வாய்க்கிழமை சுங்கத் துறை அதி காரிகள் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிருந்து மொத்தம் 3,900 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு நாட்களுக்குப் பிறகு டெப்போ லேனில் நடந்த மற்றொரு சோதனையில் நான்கு பேர் கைதா னார்கள். மற்றொரு சம்பவத்தில் 32 வயது மலேசிய ஆடவர் இதே குற்றத்தின் பேரில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கைதானார்.
துவாஸ் சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள சிகரெட்டுகள். படம்: குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம்

