ஆண்டுக்கு 350 பேர் தேசிய சேவை கடமையை நிறைவேற்றுவதில்லை

ஆண்டுக்கு 350 பேர் தேசிய சேவை கடமையை நிறைவேற்றுவதில்லை

1 mins read

கடந்த 10 ஆண்டுகளில் ஓர் ஆண்டுக்கு சராசரியாக 350 பேர் தங்களது தேசிய சேவை கடமையை ஆற்றத் தவறியதாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்திருக்கிறார். நேற்று முன்தினம் நிகழ்ந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் இது குறித்து ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆங் வெய் நெங் கேள்வி எழுப்பினார். தேசிய சேவையைப் புறக்கணித்தவர்களுக்கு தற்காப்பு அமைச்சு, அவர்கள் கடைசியாக தங்கியிருந்த வீட்டு முகவரிக்கு கடிதங்களை அனுப்புவதாக டாக்டர் இங் தெரிவித்தார்.

இவ்வாறு செய்பவர்களில் கிட்டத்தட்ட 14 விழுக்காட்டினரின் முடிவுக்கு நிதிப் பற்றாக்குறை இதற்கு முக்கிய காரணம் என்று தற்காப்புக்கான மூத்த துணையமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இருந்தபோதும், நிதிப் பிரச்சினையை எதிர்நோக்கும் தேசிய சேவையாளர்கள் 'டிஎஃப்ஏ' என்ற நிதியுதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அவர் கூறினார்.