2023 அதிபர் தேர்தல் ஆவணங்கள் மார்ச் 2ல் அழிக்கப்படும்

2023 அதிபர் தேர்தல் ஆவணங்கள் மார்ச் 2ல் அழிக்கப்படும்

1 mins read
a9cc0fe1-6fc2-4870-92e0-35ccbe4ca9c4
உச்ச நீதிமன்றத்தில் வாக்குப் பெட்டிகள். - கோப்புப் படம்: சாவ்பாவ்

சென்ற ஆண்டு அதிபர் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகளும் மற்ற ஆவணங்களும் வரும் மார்ச் மாதம் அழிக்கப்படும் என்று தேர்தல் துறை தெரிவித்துள்ளது.

1991ஆம் ஆண்டின் அதிபர் தேர்தல் சட்டத்தின்கீழ், வாக்குச் சீட்டுகளையும் மற்ற ஆவணங்களையும் கொண்ட மூடப்பட்ட அனைத்துப் பெட்டிகளும் உச்ச நீதிமன்றத்திலிருந்து துவாஸ் சவுத் எரி ஆலைக்கு மார்ச் 2ஆம் தேதி கொண்டுசெல்லப்படும்.

அந்தச் செயல்முறையைக் காணவிரும்பும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளைத் தொடர்புகொள்ளப்போவதாக தேர்தல் துறை கூறியது.

குறிப்புச் சொற்கள்