சிங்கப்பூரில் உள்ள உணவுக் கடைகளில் மின் கட்டண முறை யை ஒன்றுதிரட்டும் வண்ணம் 'நெட்ஸ்' நிறுவனம் நியமிக்கப்- பட்டுள்ளது. இங்குள்ள 12,000 உணவங் காடி நிலையக் கடை கள், சிற் றுண்டிச் சாலைகள், காப்பி கடை கள் ஆகிய அனைத் திலும் ரொக் க மற்ற கட்டண முறையைக் கொண்டுவர இந்த ஏற்பாடு உத வும். உணவுக் கடைக்காரர்கள் மின் கட்டணங்களை ஏற்கவும் அதன் தொடர்பான கணக்கு- களைத் தீர்த்து வைக்கவும் நெட்ஸ் நிறுவனம் அவர்களுக்கு அதற்கான கட்டண முறையை வழங்கும். சிங்கப்பூரில் ரொக்கப் பரிவர்த் தனைகள் இன்னும் பர வலாக மேற்கொள்ளப்பட்டுவரும் இடங் களில் ரொக்கமற்ற முறை யை அறிமுகப்படுத்துவதன் முக் கியப்படியாக இது கருதப்படு கிறது.
"சிங்கப்பூரில் வெளியில் உணவு சாப்பிடுவோரில் சுமார் 40 விழுக்காட்டினர் காப்பி கடை- கள், உணவங்காடி நிலையங்கள், சிற்றுண்டிச்சாலைகள் ஆகிய வற்- றில் சாப்பிடுகின்றனர்," என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் என்டர்பிரைஸ் சிங்கப் பூர் அமைப்பின் துணைத் தலை மை நிர்வாக அதிகாரி டெட் டான் கூறினார். "நமது நகர்ப்புற வாழ்க்கை முறையின் ஒரு முக் கியப் பகுதி யாக தொழில்நுட் பம் இடம்பெறும் வேளையில், வெளியில் உணவு சாப்பிடும் வாடிக்கையாளர்களின் அனுப வத்தை அரசாங்கம் மேம் படுத்த விரும்புகிறது. "பரிவர்த்தனைகள் பாதுகாப்- பான, எளிதான, விரைவான முறையில் மேற்கொள்ள உதவும் ஒருங்கிணைந்த மின் கட்டண முறை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் இது சாத்தி- யமாகும்," என்றார் அவர்.

