மனிதவள அமைச்சிடம் புகார் செய்ய வெளிநாட்டு ஊழியர்களுக்குச் செயலி

மனிதவள அமைச்சிடம் புகார் செய்ய வெளிநாட்டு ஊழியர்களுக்குச் செயலி

1 mins read

வெளிநாட்டு ஊழியர்கள் தாங்கள் தங்குமிடம் குறித்து மனிதவள அமைச்சிடம் தெரிவிக்க ஒரு புதிய செயலி நேற்றுமுதல் இயங்கத் தொடங்கியது. 'டோர்ம்வாட்ச்' என்ற அச்செயலிவழி ஊழியர்கள் தங்களின் வசிப்பிடத்தைப் படம் பிடித்துப் பதிவேற்றம் செய்து கருத்து தெரிவிப்பதுடன் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து வசிப்பிடத்தை நிர்வகிப்போரிடமும் மனிதவள அமைச்சிடமும் தெரிவிக்கலாம். தங்குமிடத்தை நிர்வகிப்போர் அங்கு வசிப்போரின் கருத்துகளை அறிந்தபின் எவ்வாறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன என்றும் தெரிவிக்கலாம் என இது குறித்து தேசிய வளர்ச்சி மற்றும் மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று ஒரு நிகழ்வில் பேசினார். அத்துடன் செயலி வழியாகவே ஊழியருடன் நேரடியாகத் தொடர்புகொள்ளலாம் என்றும் கூறினார்.

சுகாதாரமற்ற, நெரிசல்மிக்க சூழலில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்க வைக்கப்பட்ட சம்பவங்கள் அண்மைய காலத்தில் நிறைய நிகழ்ந்துள்ள வேளையில் இச்செயலி இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடத்துக்கான விதிமுறைகளை மீறியதற்குக் கடந்த ஆண்டில் 1,176 பேர் பிடிபட்டனர்.