அதிர்ஷ்டக்குலுக்கு மோசடி குறித்து போலிஸ் எச்சரிக்கை

அதிர்ஷ்டக்குலுக்கு மோசடி குறித்து போலிஸ் எச்சரிக்கை

2 mins read

அதிர்ஷ்டம் உங்களை அழைக் கிறது என வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இது போன்று பலதரப்பட்ட அதிர்ஷ்டக் குலுக்கு மோசடி நடவடிக்கைகளில் ஏராளமானோர் பணத்தை இழந் துள் ளனர். இதுகுறித்து போலிஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பொதுமக்கள் விழிப்புடன் இருக் கு மாறு கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை அதிர்ஷ்டக் குலுக்கு மோசடி பற்றி குறைந்தது 84 புகார்கள் வந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இது போன்ற அதிர்ஷ்டக் குலுக்கு மோசடிகளால் மொத்தம் S$122,000 வெள்ளி ஏமாற்றப் பட்டுள் ளது. இவற்றுள் அதிகபட்ச மாக ஏமாற்றப்பட்டது 34,000 வெள்ளியாகும். இந்த மோசடி களுக்கு 'ஐஎம்ஓ' என்னும் செயலி பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

இந்தச் செயலி குறுந்தகவல் அனுப்புவதற்குப் பயன்படுத்தப் படும் ஒரு செயலி ஆகும். இதன் மூலம் 'வோர்ல்ட் வின் னர்' என்ற பெயரில் மோசடிக்கா ரர் கள், "அதிர்ஷ்டக் குலுக்கில் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கிடைத்துள்ளது. தவற விடாதீர்கள்," என்பது போன்ற வாசகங்களை அனுப்பி வைப்பார் கள். இந்தக் குறுந்தகவலைக் காண் ப வர்கள், அந்தப் பரிசுத் தொகை யைப் பெறுவதற்கு ஆசைப் பட்டு, மோசடிக்காரர் களின் ஆலோ சனைப் படி அவர் களுக்குப் பணம் அனுப்பி ஏமாந்து போவர். இதுபோன்ற மோசடிச் சம்ப வங்களில் மோசடிக்காரர் ஒருவர் போலிஸ்காரரைப் போல் நடித்து ஏமாற்றிய சம்பவமும் நிகழ்ந்துள் ளது. அவ்வாறான சம்பவம் ஒன்றில், "உங்கள் வங்கிக் கணக்கில் சட்டவிரோதமான வகை யில் பணப்பரிமாற்றம் நடை பெற்றுள்ளது," என்று கூறுவர். பின்னர் அது தொடர்பாக விசா ரணை மேற்கொள்ள வேண் டும் என்றும் உங்கள் கடன், பற்று அட்டைகளின் விவரங்களையும் அட்டையின் பின்பக்கமுள்ள முக் கியமான குறியீட்டையும் கேட்டு வாங்கிக்கொள்வர்.