ஆபாசப் படங்களை வெளியிட்ட இளைஞருக்குக் கண்காணிப்பு ஆணை

ஆபாசப் படங்களை வெளியிட்ட இளைஞருக்குக் கண்காணிப்பு ஆணை

1 mins read

தன்னை எப்போதும் கேலி செய்துகொண்டிருந்த 17 வயது பெண் உறவினரைப் பழிவாங்குவதற்காக அவர் குளிக்கும்போது காணொளிகளும் படங்களும் எடுத்து அவற்றை இணையத்தில் வெளியிட்ட 19 வயது இளைஞருக்கு ஓராண்டு ஒன்பது மாதங்களுக்கான கண்காணிப்பு ஆணை நேற்று விதிக்கப்பட்டது. இளைஞர் கடந்த ஆண்டு ஜூன் 18ம் தேதி பெண் குளிக்கும்போது தன் கைபேசியைக் கொண்டு படம் எடுத்ததாகவும் அவற்றை செப்டம்பர் 3ம் தேதியன்று இணையத்தின்வழி பகிர்ந்துகொண்டதோடு பெண்ணின் பெயர், பள்ளி ஆகிய விவரங்களையும் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. தண்டனை விதிப்பின்போது கண்காணிப்பு ஆணையுடன் 150 மணிநேரம் சமூக சேவை செய்யவேண்டும் என்றும் இளைஞரின் நன்னடத்தையை உறுதிசெய்ய அவருடைய தாயாருக்கு $5,000 வெள்ளி முறியும் விதிக்கப்பட்டன.