பொதுநல உணர்வுடன் செயல்பட்டவர்களுக்கு விருது

பொதுநல உணர்வுடன் செயல்பட்டவர்களுக்கு விருது

1 mins read
7c5fd814-f5f7-4b94-84d9-cb914c8dfd80
-

இரு வெவ்வேறு சம்பவங்களில் கைபேசிவழி பெண்ணின் குட்டைப் பாவாடைக்குள் காணொளிப் படம் எடுத்த ஆடவர்களைப் பிடிப்பதற்கு உதவிய இருவருக்கு நேற்று பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்புத் தளபத்தியத்தில் நடந்தேறிய விருதளிப்பு விழாவின்போது பொதுநல உணர்வுமிக்க செயலுக்கான விருது வழங்கப்பட்டது. பீஷான், பிரேடல் எம்ஆர்டி நிலையங்களில் நிகழ்ந்த இரு சம்பவங்களிலும் மின்படிக்கட்டில் பயணம் செய்த பெண்களைப் பின்னால் நின்று கைபேசியைப் பயன்படுத்தி பாவாடைக்குள் படம் எடுத்த ஆடவர்களை வழிமறித்ததோடு அவர்களைப் போகவிடாமல் தடுத்து போலிசாரிடம் ஒப்படைத்தனர் விருது பெற்ற திரு வோங் டொங் ஹாய் மற்றும் திரு எங் ஜியன் சுவான்.

பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது பயணிகள் எந்நேரமும் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்திருக்கவேண்டும் என்றும் அனைவரும் விழிப்புடன் இருந்து ஒருவருக்கொருவர் உதவி செய்தால் குற்றச்செயல்களைத் தடுக்கலாம் என்றும் விருதை வழங்கிய சூப்ரின்டெண்டண்ட் வாங் கூறினார்.

திரு வோங் டொங் ஹாய் (இடது) சூப்ரின்டெண்டண்ட் அலன் வாங்கிடமிருந்து விருது பெற்றார். படம்: சிங்கப்பூர் போலிஸ் படை