இவ்வாண்டின் தேசிய தின அணுவகுப்பின் முன்னோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு ஜூலை மாதம் சில பேருந்துச் சேவைகள் வழி மாற்றிவிடப்படும்.
ஜூலை மாதத்தின் கடைசி மூன்று சனிக்கிழமைகளில் ஆறு பொதுப் பேருந்துச் சேவைகள் வழி மாற்றிவிடப்படும்.
ஜூலை 11, 18, 25 தேதிகளில் பேருந்துச் சேவை எண்கள் 10, 11, 14, 16, 70/70M, 196 ஆகியவை சில பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தப்படமாட்டா. நிக்கல் விரைவுச்சாலை, ஸ்டேடியம் பொலிவார்ட், ஸ்டேடியம் கிரெசன்ட், ஸ்டேடியம் வாக் ஆகிய நிறுத்தங்களில் அச்சேவைகள் நிறுத்தப்படமாட்டா என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிக்கை மூலம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களில், சன்டெக் சிட்டி, தேசிய விளையாட்டரங்கம், சிங்கப்பூர் உள்ளரங்கு ஆகியவற்றுக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களும் அடங்கும்.
சேவை மாற்றம் இடம்பெறும் தேதிகளில் சம்பந்தப்பட்ட இடங்களுக்குப் போகவேண்டியவர்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறும் தேவைப்பட்டால் எம்ஆர்டியை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறவுருக்கும் இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பு தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தேசிய தின அணிவகுப்பு தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

