2027 பள்ளி ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி தொடங்கும்

2027 பள்ளி ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி தொடங்கும்

1 mins read
கல்வி அமைச்சின் பாலர்பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அது பொருந்தும்
8a4ab69b-6a40-4d70-81cf-021f221b0f1c
பெரும்பாலான கல்வி அமைச்சின் பாலர்பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளுக்கு 2027ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி கல்வி ஆண்டு நிறைவடையும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2027ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் பாலர்பள்ளி ஒன்றாம் வகுப்பு, தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பு, உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் சேரும் மாணவர்கள் தங்கள் பள்ளி ஆண்டை ஜனவரி 4ஆம் தேதி தொடங்குவார்கள்.

கல்வி அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) அந்தத் தகவலைத் தெரிவித்தது.

2027ஆம் ஆண்டில் பாலர்பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவர்களும், தொடக்கநிலை இரண்டு முதல் ஆறு வரை படிக்கும் மாணவர்களும் ஜனவரி 5ஆம் தேதி பள்ளிக்குத் திரும்ப வேண்டும்.

கல்வி அமைச்சின் பாலர்பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றுக்கான 2027ஆம் ஆண்டின் பள்ளி இறுதி நாள் நவம்பர் 19ஆம் தேதியாகும்.

இருப்பினும், ஜிசிஇ சாதாரண நிலை (’ஒ’ நிலை) தேர்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் பள்ளிகளுக்கு மட்டும் இறுதி நாள் சற்று முன்னதாகவே, அக்டோபர் 29ஆம் தேதி நிறைவடையும்.

தொடக்கக் கல்லூரி அல்லது மிலெனியா கல்வி நிலையத்தில் முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்கள் பிப்ரவரி 3ஆம் தேதி தங்களது வகுப்புகளைத் தொடங்குவார்கள். அந்தப் பள்ளிகளில் படிக்கும் மற்ற மாணவர்கள் ஜனவரி 11ஆம் தேதி பள்ளிக்குத் திரும்புவார்கள்.

மேல்நிலைத் தேர்வுகள் (A-level) எழுதாத மாணவர்களுக்கு ஆண்டிறுதிப் பள்ளி விடுமுறை நவம்பர் 27ஆம் தேதி தொடங்கும். அதேவேளையில், அந்தத் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு அவர்களின் கடைசித் தேர்வு முடிந்த பிறகு விடுமுறை தொடங்கும்.

2027ஆம் ஆண்டுக்கான பள்ளி நாள்கள், விடுமுறைகள் பற்றிய விவரங்கள், https://www.moe.gov.sg/calendar எனும் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்
பள்ளிவிடுமுறைமாணவர்

தொடர்புடைய செய்திகள்