மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில் நுட்பங்களும் புத்தாக்க வர்த்தக முறைகளும் மருத்துவத் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளன. தங்கள் நிறுவனத்தின் திறன் களை மட்டுமே நம்பி நிறுவனங்கள் தற்போது செயல்படுவதில்லை என்று வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆராய்ச்சி, மேம்பாடுகளுக்குப் புதிய முறைகளை உருவாக் குவதற்குத் தனித்துவம் வாய்ந்த தொழில்துறைகளின் பங்குதாரர் கள் ஒத்துழைப்பு நல்குவதால் புத்தாக்கம் முக்கிய அம்சமாக விளங்கும் என்றார் அமைச்சர். துவாசில் $10 மில்லியன் மதிப்பில் 'அக்யூரோன் மெட்டெக்'- =ஆல் கட்டப்பட்ட தொழில்நுட்ப நிலையத்தைத் திறந்து வைத்து அமைச்சர் பேசினார். சுகாதார பராமரிப்பு, மின் னிலக்கப் புத்தாக்கம், வடிவமைப்பு போன்றவற்றுக்கான புதிய தொழில்நுட்பங்களைப் பரி சோதிக்கும் வசதிகளை இந்த நிலையம் கொண்டிருக்கும்.
சிறுநீரக செயலிழப்புடைய நோயாளிகளுக்கு உதவும் 'அவாக் டெக்னாலஜிஸ்' நிறுவன ஊழியரிடம் அமைச்சர் ஈஸ்வரன்(வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

