முன்னால் செல்லும் லாரியை முந்திக்கொண்டு செல்வதற்காக போக்குவரத்துக்கு எதிராகத் தன் கறுப்பு நிற மசராத்தி காரை அதிவேகத்தில் ஓட்டிய 49 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சென்ற வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு லோரோங் சுவான் பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. தன் காரை திடீரென்று வலப்பக்கம் செலுத்திச் சாலை நடுவிலுள்ள தடுப்பை உரசியதுடன் சாலை விளக்குக் கம்பத்தையும் நூலிழையில் இடிக்காமல் சாலையின் மறுதடத்தில் வந்து கொண்டிருந்த போக்குவரத்துக்கு எதிராக வாகனத்தை ஆடவர் செலுத்தியதாக கூறப்பட்டது. எதிரில் வந்த ஒரு டாக்சியையும் காரையும் மோதாமல் மீண்டும் சரியான தடத்துக்கு வந்த ஆடவர் பின்னர், லாரியை முந்திச் சென்று அதை நகரவிடாமல் தன் வாகனத்தை அதற்கு முன்னால் நிறுத்தியதாகவும் நம்பப்படுகிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.
லாரியை முந்திக்கொண்டு கறுப்பு நிற மசராத்தி கார் போக்குவரத்துக்கு எதிராகச் சென்றது. படம்: ஃபேஸ்புக்

