எடைக்குறைப்பு மருந்துக்கு எதிராக எச்சரிக்கை

1 mins read
a2411509-b6c7-4ac5-beb6-debd39bbdd78
-

உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் மருத்துவப் பொருட்களைக் கொண்டுள்ளதால் 'கெ லெ' என்ற எடைக்குறைப்பு மருந்தை உட்கொள்ளவேண்டாம் என்று சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரித்துள்ளது. இந்த எடைக்குறைப்பு மருந்து, பசியை அடக்கி உடல் எடையைக் குறைக்க வல்லது என்று இணையத்தில் விளம்பரப்படுத்தப்பட்டதாகவும் இம்மருந்தினை உட்கொண்டு 11 கிலோ குறைந்ததாக விளம்பரப்படுத்திய பெண் தன் சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதாகவும் கூறப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ஆணைய அதிகாரிகள் பெண்ணின் வீட்டைச் சோதனையிட்டதில் மருந்து பொட்டலங்களைக் குளிர்சாதனப் பெட்டியில் உணவுப்பொருட்களிடையே பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். இம்மருந்தினை உட்கொள்வதை உடனே நிறுத்திடுமாறு ஆணையம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக 30 வயது மதிக்கத்தக்க அப்பெண் விசாரணையில் உதவி வருகிறார்.